பாமாலை · Hymn90
நாற்பது நாள்
Forty days and forty night
1
நாற்பது நாள் ராப் பகல்வனவாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப் பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர்.
2
ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகந் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை.
3
உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும்.
4
சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்வென்றீரே நீர் அவனை
5
அப்போதெங்கள் ஆவிக்கும்மா சமாதானம் உண்டாம்தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம்.