பாமாலை · Hymn94

தயாள இயேசு தேவரீர்

Ride on ride on

Projector

Lyrics

1
தயாள இயேசு தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.
2
தாழ்வாய் மரிக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்மரணம் வெல்லும் வீரரேஉம் வெற்றி தோன்றுகின்றதே.
3
விண்ணோர்கள் நோக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வியப்புற்றே அம்மோக்ஷத்தார்அடுக்கும் பலி பார்க்கிறார்.
4
வெம் போர் முடிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்தம் ஆசனத்தில் ராயனார்சுதனை எதிர்பார்க்கிறார்.
5
தாழ்வாய் மரிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்நோ தாங்கத் தலை சாயுமே!பின் மேன்மை பெற்று ஆளுமே.
94A தயாள இயேசு தேவரீர் · Winchester New — Tamil Pamalai