பாமாலை · Hymn107

துக்கம் கொண்டாட

O come and mourn with me

Projector

Lyrics

1
துக்கம் கொண்டாட வாருமே,பாரும்! நம் மீட்பர் மரித்தார்;திகில் கலக்கம் கொள்ளுவோம்;இயேசு சிலுவையில் மாண்டார்.
2
போர் வீரர், யூதர் நிந்தித்தும்,மா பொறுமையாய்ச் சகித்தார்நாமோ புலம்பி அழுவோம்;இயேசு சிலுவையில் மாண்டார்.
3
மும்மணி நேரம் மாந்தர்க்காய்,தம் மெளனத்தாலே கெஞ்சினார்;நல் வாக்கியம் ஏழும் மொழிந்தேஇயேசு சிலுவையில் மாண்டார்.
4
சிலுவையண்டை வந்துசேர்,நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;இயேசு சிலுவையில் மாண்டார்.
5
உருகும் நெஞ்சும் கண்ணீரும்உள்ளன்பும் தாரும், இயேசுவே;மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்நீர் சிலுவையில் மாண்டீரே!
107A துக்கம் கொண்டாட · St. Cross — Tamil Pamalai