பாமாலை · Hymn183

எப்போதும் இயேசுநாதா

O Jesus I have promised

Projector

Lyrics

1
எப்போதும், இயேசு நாதா,உம்மைப் பின்பற்றுவேன்என்றே தீர்மானமாகநான் வாக்குக் கொடுத்தேன்;நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்அப்போது அஞ்சிடேன்;முன்சென்று பாதை காட்டும்,நான் வழி தவறேன்.
2
பூலோக இன்பம், செல்வம்வீண் ஆசாபாசத்தால்என் ஆத்துமா மயங்காமல்தெய்வீக பலத்தால்நீர் துணைநின்று தாங்கும்,என் அருள் நாயகா;தீங்கணுகாமல் காரும்,மா வல்ல ரட்சகா.
3
ஆங்காரம் சுய சித்தம்தகாத சிந்தையால்மா கலக்கம் உண்டாகிநான் தடுமாறினால்,நீர் பேசும், அருள் நாதா,கொந்தளிப்படங்கும்;உம் நேச சத்தம் கேட்டுஎன் ஆவி மகிழும்.
4
”பின்பற்றினால் விண் வீட்டில்பேரின்பம் பெறுவீர்”,என்றே உம் சீஷர் நோக்கிநீர் வாக்கு அளித்தீர்;அவ்வருள் வாக்கை நம்பிஇவ்வேழை அடியேன்,“இதோ, பின்செல்வேன்,” என்றுபிரதிக்னை பண்ணினேன்.
5
ஓயாமல் பெலன் தாரும்உம்மடிச்சுவட்டில்கால் வைத்து நடந்தேகிநான் யாத்திரை செய்கையில்நீர் வழி காட்டி, என்னைகைதாங்கி வருவீர்;அப்பாலே மோட்ச வீட்டில்பேர் வாழ்வை அருள்வீர்.
183A எப்போதும் இயேசுநாதா · Llanfyllin — Tamil Pamalai