பாமாலை · Hymn226
காலந்தோறும் தயவாக
Not Available
1
காலந்தோறும் தயவாகதேவரீர் அளித்திடும்பலவித நன்மைக்காகஎன்ன ஈடுதான் தகும்?எங்கள் வாயும் உள்ளமும்என்றும் உம்மைப் போற்றிடும்.
2
மாந்தர் பண்படுத்தி வித்தைபூமியில் விதைக்கிறார்கர்த்தரே அன்பாக அதைமுளைத்தோங்கச் செய்கிறார்ஏற்ற காலம் மழையும்பெய்து பூண்டை நனைக்கும்.
3
உம்முடைய சித்தத்தாலேகாற்று வெயில் வீசுமேகால மழை பனியாலேபயிர்கள் செழிக்குமேஉழுவோர் பிரயாசம் நீர்சித்தியாகச் செய்கிறீர்.
4
ஆதலால் மகிழ்ந்து நாங்கள்உம்மை அன்பாய்த் துதிப்போம்தாழ்மையோடு உமக்கெங்கள்நெஞ்சத்தையே படைப்போம்தேகம் போஷிக்கின்ற நீர்ஆவியையும் போஷிப்பீர்.