பாமாலை · Hymn287

என் பாவத்தின் நிவர்த்தியை

O Jesu du mein Brautigam

Projector

Lyrics

1
என் பாவத்தின் நிவர்த்தியைஉண்டாக்க, அன்பாய் ஜீவனைகொடுத்து, சிலுவையிலேமரித்த தெய்வ மைந்தனே
2
அநேக பாவம் செய்தோனாய்மா ஏழையும் நசலுமாய்ராப்போஜனத்துக்கு வரும்அடியேனைத் தள்ளாதேயும்
3
நீர் பாவியின் இரட்சகர்,நீர் யாவையும் உடையவர்,நீர் பரிகாரி, நீர் எல்லாம்,குணம் வரும் உம்மாலேயாம்.
4
ஆகையினால், என் இயேசுவே,குணம் அளியும், என்னிலேஅசுத்தமான யாவையும்நிவர்த்தியாக்கியருளும்
5
இருண்ட நெஞ்சில் ஒளியும்மெய்யான விசுவாசமும்தந்து, என் மாம்ச இச்சையேஅடங்கப்பண்ணும், கர்த்தரே.
6
நான் உம்மில் வானத்தப்பமேமகா வணக்கத்துடனேபுசித்தும்மை எக்காலமும்நினைத்துக்கொண்டிருக்கவும்
7
நான் இவ்விருந்தின் நன்மையால்சுத்தாங்கனாய்ப் பிதாவினால்மன்னிப்பைக் கிருபையையும்அடைய அருள் புரியும்.
8
என் இயேசுவே, நான் பண்ணினநல் நிர்ணயம் பலப்பட,பிசாசை ஓட்டியருளும்,தெய்வாவி என்னை ஆளவும்
9
உமக்கே என்னை யாவிலும்நீர் ஏற்றோனாக்கியருளும்;தினமும் எனக்கும்மிலேசுகம் அளியும், கர்த்தரே.
10
நான் சாகும்போதென் ஆவியைமோட்சானந்தத்தில் உம்மண்டைசேர்த்தென்னை உம்மால் என்றைக்கும்திருப்தியாக்கியருளும்.
287B என் பாவத்தின் நிவர்த்தியை · Bavarian 129 (O Jesu du mein) — Tamil Pamalai