பாமாலை · Hymn38
நீர் தந்த நாளும்
The day Thou gavest Lord
1
நீர் தந்த நாளும் ஓய்ந்ததேகர்த்தாவே ராவும் வந்ததேபகலில் உம்மைப் போற்றினோம்துதித்து இளைப்பாறுவோம்.
2
பகலோன் ஜோதி தோன்றவேஉம் சபை ஓய்வில்லாமலேபூவெங்கும் பகல் ராவிலும்தூங்காமல் உம்மைப் போற்றிடும்
3
நாற்றிசையும் பூகோளத்தில்ஓர் நாளின் அதிகாலையில்துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமேஓர் நேரம் ஓய்வில்லாததே
4
கீழ்கோளத்தோர் இளைப்பாறமேல்கோளத்தோர் எழும்பிடஉம் துதி சதா நேரமும்பல் கோடி நாவால் எழும்பும்.
5
ஆம், என்றும் ஆண்டவரே நீர்,மாறாமல் ஆட்சி செய்குவீர்;உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்.