பாமாலை · Hymn40
மெய் ஜோதியாம் நல்
Sun of my soul Thy Saviour
1
மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும்.
2
என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும்.
3
என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும்.
4
இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே
5
வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும்
6
பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும்