பாமாலை · Hymn629
பாதகரின் தீவினைக்கும்
Blessed is the man that walketh
1
பாதகரின் தீவினைக்கும்பாவிகளின் பாதைக்கும்துர்ச்சனரின் தோழமைக்கும்மார்க்கத்துக்கும் மிகவும்தூரமாகி கர்த்தரைத்தேடி தன் இதயத்தைஅவருக்கொப்புக் கொடுத்தோன்வாழ்வில் வளங்கண்டடைந்தோன்.
2
கர்த்தர் தாம் அன்பாகத் தந்துபோதிக்கும் நல் வார்த்தையைவாஞ்சையாய் ஆராய்ந்து வந்து,அல்லும் பகலும் அதையோசித்து உட்கொள்பவன்மிகுதியும் பாக்யவான்;அவன் ஆவி என்றென்றைக்கும்அந்நல்வார்த்தையால் பிழைக்கும்.
3
அவன் வாழ்வு ஆற்றோரத்தில்நடப்பட்டு இனியகனிகளைத் தருணத்தில்தருஞ் செழிப்பாகியநல் மரத்துக்கொத்தவன்;அவன் நல்ல மனிதன்;அவன் செய்கை நிலை நிற்கும்அது நன்மையாய்ப் பலிக்கும்.
4
ஆகிலும் ஆகாதவர்கள்காற்றில் ஓடிப்போம் பதர்;ஞாயத் தீர்ப்பிலே அவர்கள்தள்ளப்பட்டு அழிவர்.நீதியரின் நல்வழிகர்த்தருக்கு மகிழ்ச்சி,அதுவே மீட்பாய் முடியும்;தீயர் வழியோ அழியும்.