பாமாலை · Hymn630

ஆ ஸ்வாமி என் பிறப்பினால்

O Lord though far from thee by birth

Projector

Lyrics

1
ஆ, ஸ்வாமி என் பிறப்பினால்உமக்குத் தூரமானநான் மீண்டும் ஞானஸ்நானத்தால்உமக்குப் பிள்ளையானசீராகுதல் மா இன்பமே;உமக்கென்றுந் தோத்திரமே,பிதா குமாரன் ஆவி.
2
நீர் என்னைத் தள்ளிப் போடவும்,தண்டிக்கவும் என் பாவம்என்னை எற்றவனாக்கியும்,நீர் என் மேல் பரிதாபம்வைத்தென்னை உம்மிடத்திலேஅன்பாக சேர்த்துக் கொண்டீரே;ஆ தயவுள்ள ஸ்வாமி.
3
என்றுமே என் பிதா நீரே,நான் உம்முடைய பிள்ளை;பலவீனத்தை என்னிலேநீர் கண்டும், மோசமில்லை;நான் பக்தியாய் என் தாழ்மையில்மன்னிப்புக் கேட்டுக் கொள்கையில்நீர் என் ஜெபத்தைக் கேட்பீர்.
4
மூவொருவராம் உம்மையேநான் பிள்ளைப் பக்தியாகப்பணிந்து, உமக்கேற்கவேநடப்பேன் என்றதாகத்திருமுழுக்கில் அடியேன்உடன்படிக்கை பண்ணீனேன்;இதை நினப்பேனாக.
5
பிசாசை முழுவதுமாய்என் மனத்தால் வெறுத்தேன்என்றப்போதுமக்கு முன்பாய்நான் வார்த்தையைக் கொடுத்தேன்;நான் அதன் தந்திரங்களைவெல்லவே என் இதயத்தைஉமக்கே ஒப்புவிப்பேன்.
630 ஆ ஸ்வாமி என் பிறப்பினால் — Tamil Pamalai