பாமாலை · Hymn67
1
பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன்.
2
இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன்.
3
இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார்.
4
பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்த்தியாம்
5
குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே.
பாகம்
2ம் பாகம்விசுவாசிகள் சொல்லுகிறது
6
எல்லாம் சிஷ்டித்த தேவரீர்இம்மட்டுக்கும் இறங்கினீர்;இங்கே இப்புல்லின்மேல், ஐயோநீர், ஸ்வாமி, வைக்கப்பட்டீரோ!
7
ஆ, இன்பமான இயேசுவே,மெய் ஆஸ்தியான உம்மையேநான் பெற்றிருக்க, என்றைக்கும்என் நெஞ்சில் வாசமாயிரும்.
8
அத்தால் நான் நித்தம் பூரிப்பாய்இருந்து, மா சந்தோஷமாய்இம்மாய்கையை வெறுக்கிறேன்கதியாம் உம்மைப் பாடுவேன்
9
பிரிய ஏக மைந்தனைபாராமல் தந்த ஸ்வாமியைஇஸ்தோத்திரிப்போம்; பூமிக்குரட்சிப்பின் நாள் உதித்தது.