பாமாலை · Hymn135
மகிழ் கர்த்தாவின்
Nun freut euch Gottes Kinder all
1
மகிழ், கர்த்தாவின் மந்தையேஇதோ, கெம்பீரத்துடனேபரத்துக்குள் அதிபதிஎழுந்து போனதால் துதி.
2
விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்கொண்டாடி, மா வணக்கமாய்பணிந்து, இயேசு ஸ்வாமிக்குஆராதனை செலுத்திற்று.
3
கர்த்தாதி கர்த்தர் நமக்குதலைவரானார் என்பதுபரத்தின் தூதருக்கெல்லாம்விசேஷித்த சந்தோஷமாம்.
4
ஆ, இயேசு தெய்வ மைந்தனே,கர்த்தா, பர்த்தா, முதல்வரே,அடியார் நெஞ்சு உமக்குஎன்றும் ஆதீனம் ஆனது.
5
விண்ணோரைப் போல் மண்ணோர்களேநம் ஆண்டவரை என்றுமேஅன்பாகக் கூடிப் பாடுங்கள்,அவரின் மேன்மை கூறுங்கள்.