பாமாலை · Hymn182
இளைஞர் நேசா அன்பரே
Just as Iam Thine own to be
1
இளைஞர் நேசா, அன்பரே,அடியேனை உம் சொந்தமாய்படைத்திட சமூலமாய்,ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன்.
2
இளமைக் காலை என்னையேபடைப்பேன் வாக்குப்படியே,பின்வையேன் ஒன்றும் – இப்போதேபூரண ஆவலாய் வந்தேன்.
3
ஒளியில் என்றும் ஜீவிப்பேன்நீதிக்காய் என்றும் உழைப்பேன்முழுபலத்தால் சேவிப்பேன்உம்மண்டை ஆதலால் வந்தேன்.
4
சிறியேன் திடகாத்திரன்;சத்தியம், நீதி, உமக்காய்ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்;ஜீவாதிபதி - நான் வந்தேன்.
5
பொன், புகழ், சித்தி, இன்பமும்மேன்மையாய்த் தோன்றும் – ஆயினும்விஸ்வாசமே மேல் நாட்டமாய்ஜீவநாள் முற்றிலும் – வந்தேன்.
6
உமக்காய் மேன்மை யடைய,ஜெயித்து கிரீடம் சூடிட,பணிந்தும் பாதம் படைக்க,ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன்.