பாமாலை · Hymn398

மேன்மை நிறைந்த ஆண்டவர்

The day is surely drawing near

Projector

Lyrics

1
மேன்மை நிறைந்த ஆண்டவர்பூலோகத்தார் எல்லார்க்கும்தகுந்த நீதி செய்பவர்இறங்கும் நாள் உதிக்கும்அப்போது மா பிரஸ்தாபமாய்எங்கும் விளங்கும் ஜோதியாய்மின்போலத் தோன்றுவாரே.
2
இலக்கமற்ற தூதர்கள்அவர்க்கு முன்னதாகபலத்த சத்த தாரைகள்உடையவர்களாகமுழக்கம் செய்ய, பூமியும்விஸ்தாரமான வானமும்கரைந்து வெந்துபோகும்.
3
அத்தூதரின் எக்காளங்கள்எத்திக்கிலும் முழங்கும்அந்நேரம் மாந்தர் கூட்டங்கள்உயிரடைந்தெழும்பும்ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும்ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும்வணக்கமாய் நிற்பார்கள்.
4
சன்மார்க்கர் மோட்ச பாதையில்நடந்ததால் மகிழ்ந்து,சிறப்படைந்து நிற்கையில்துன்மார்க்கரோ அதிர்ந்துநியாயமான சாபத்தைஅடைந்து, கர்த்தர் முகத்தைவிட்டோடி மாளுவார்கள்.
5
என் மனமே, துன்மார்க்கத்தைவெறுத்துத் தள்ளிவிட்டு,அன்புள்ள இயேசு கிறிஸ்துவைநம்பிக்கையாய்ப் பிடித்து,கறையும் மாசுமின்றியேகர்த்தர் முன்பாக நிற்கவேநீ ஆவலோடு தேடு.
398A மேன்மை நிறைந்த ஆண்டவர் · Sinai — Tamil Pamalai