பாமாலை · Hymn11

மகா அதிசயங்களை

Sei Lob und Her dem hochsten Gut

Projector

Lyrics

1
மகா அதிசயங்களைச்செய்தென்னைப் பூரிப்பித்து,உபத்திரவத்தின் பாரத்தைஇரக்கமாய்க் கழித்து,ரட்சிக்கிற தயாபரர்இஸ்தோத்திரிக்கப்பட்டவர்;கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.
2
கர்த்தாதி கர்த்தா, தேவரீர்யாவற்றையும் நன்றாகசிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர்என்றும்மைப் பணிவாகவிண் மண் கடல் ஆகாசத்துசேனைத் திரள்கள் போற்றுது;கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.
3
ஆ, கேளும் என்தன் துன்பத்தில்கர்த்தாவைக் கெஞ்சிவந்தேன்அப்போது ஏற்ற வேளையில்மகா ரட்சிப்பைக் கண்டேன்,இதற்கென் நாவே, கீதம்சொல்என்னோடெல்லோரும் பாடுங்கள்,கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.
4
நான் தேவரீரை என்றைக்கும்மகிழ்ச்சியாய்த் துதிப்பேன்;நான் உம்மை நித்தநித்தமும்புகழ்ந்து ஸ்தோத்திரிப்பேன்,என் ஆத்துமமும் தேகமும்,கர்த்தாவே, உம்மைப் போற்றவும்;கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.
5
மெய்மார்க்கத்தாரே, கர்த்தரைதுதித்துக் கொண்டிருங்கள்,அவருடைய நாமத்தைஎந்நேரமும் தொழுங்கள்.பொய்த் தேவர் செவிடூமையர்,கர்த்தா கர்த்தாவே ஆண்டவர்,கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.
6
நாம் தெய்வ சன்னிதியிலேமகா மகிழ்ச்சியாகவந்துன்னத கர்த்தாவையேவணக்கம் செய்வோமாகபராபரனைப் போலே யார்,யாவற்றையும் நன்றாக்கினார்கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.
11B மகா அதிசயங்களை · Klug — Tamil Pamalai