பாமாலை · Hymn201

நாதா உம் வார்த்தை

Lord speak to me that I may speak

Projector

Lyrics

1
நாதா உம் வார்த்தை கூறவேஎன்னோடு பேசியருளும்கெட்டோரை நானும் தேடவேநீர் என்னைத் தேடிப் பிடியும்.
2
வழி விட்டலைவோருக்குநான் காட்ட என்னை நடத்தும்மன்னாவைப் பசியுள்ளோர்க்குநான் ஊட்ட என்னைப் போஷியும்
3
மா துன்ப சாகரத்தினில்அழுந்துவோரைத் தாங்கவும்,கன்மலையான உம்மினில்நான் ஊன்றி நிற்கச் செய்திடும்.
4
அநேக நெஞ்சின் ஆழத்தைஎன் வார்த்தை ஊடுருவவும்,சிறந்த உந்தன் சத்தியத்தைஎனக்குப் போதித்தருளும்.
5
நான் இளைத்தோரைத் தேற்றவும்சமயோசிதமாகவேசுகிர்த வாக்குரைக்கவும்என்னையும் தேற்றும், கர்த்தரே.
6
நான் நேசம் பொங்கும் நெஞ்சினால்உம் அன்பும் மாண்பும் போற்றவேஉம் பரிபூரணத்தினால்என் உள்ளத்தை நிரப்புமே
7
உம் மகிமை சந்தோஷத்தில்நான் பங்கடையும் வரைக்கும்உம் சித்தம், காலம், இடத்தில்நீர் என்னை ஆட்கொண்டருளும்.
201B நாதா உம் வார்த்தை · Llef — Tamil Pamalai